Saturday, October 7, 2017

விவாதம்,விதண்டாவாதம்.

விவாதம் ,விதாண்டாவாதம்

விவாதம் செய்யா மால் ஏன் ஒதுங்கிறீர் என சிலர் என்னிடம் கேட்கின்றனர்
என்னுடைய ஆசிரியர்களின் வழி காட்டலின் அடிப்படையிலேயே இந்த முடிவிற்கு நான் வந்துள்ளேன் என முகநூல் நண்பர்களாக பல ஆலிம் பெருமக்களும்,அறிவு ஜீவிகளும்,சிந்தனையாளர்களும் இருக்கின்றனர்.
என் எழுத்தில் ஏதாவது தவறு இருந்தால் கண்ணியமாக சுட்டிக்கா ட்டுகிரார்கள்.
அவர்களுக்காக இந்த விளக்கத்தை தருகிறேன்
மதரசா என்றழைக்கப்படும் அரபுக்கல்லுரிகளில் நான்காவது அய்ந்தாவது வகுப்புகளில் மன்திக் எனப்படும் தர்க்கவியல் கற்றுக் கொடுக்கப்படுகிறது
அதில் விவாதம் செய்வதை மூன்று வகையாக பிரிக்கின்றனர்
مناظرة،
مجادلة
مكابرة
முனாரளா என்பது ஆரோக்கியமான விவாதம் .இதில் விவாதம் செய்பவர்கள் எடுத்து க்கொண்ட விடயத்தில் ஆழ்ந்த விஷய ஞானம்உள்ளவர்களாக,திறந்த மனமுடன்இருப்பார்கள்  உண்மையை ஏற்றுக்கொள்ளும் முடிவுடன் விவாதம் செய்வார்கள்.
உதாரணமாக ஒருவர் குர் ஆனில் எங்கெல்லாம் இப்படி செய்யுங்கள் என அம்ரு ஏவலாக வருகிறதோ அதைச்செய்வது கட்டாயம் வாஜிப் என்கிறார் ,மற்றவர் அதை மறுத்து குர் ஆனில் வரும் அனைத்து ஏவல் களையும் அவ்வாறு எடுத்துக் கொள்ளமுடியாது,சில இடங்களில் அதனை செய்வது நல்லது என ஆலோசனையாகவும் எடுத்துக்கொள்ளலாம் என வாதிட்டு அதற்கு ஆதாரமாக
2:282. ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவணையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்;
எனும் வசனத்தில் فَاكْتُبُوهُ எழுதி வைத்துக் கொள்ளுங்கள் எனும் வார்த்தை  அம்ரு ஏவலாக வந்துள்ளது இதற்கு விரிவுரை எழுதிய அனைத்து அறிஞர்களும் இது கடமையல்ல செய்யாவிட்டால் பாவமுமல்ல மாறாக உங்களுக்கு நன்மை பயக்கும் ஒரு ஆலோசனையாக கூறப்பட்டுள்ளது என்கிறார்கள் என தன் வாதத்தை முன் வைக்கிறார்
மற்றவர் இதனை மறுக்கும் ஆதாரம் அவரிடம்  இல்லாததால் இதனை ஏற்றுக்கொள்கிறார்.

இது போன்ற விவாதங்கள் ஆரோக்கியமானவை,நபித்தோழர்களுக்கி டையே  இவ்வாறான விவாதங்கள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக கலிபா அபூபக்கர் மற்றும் உமர் ரழியால்லாஹ் அன்ஹுமா அவர்களிடையே குர்ஆனின் வசனங்களை ஒன்று சேர்க்கும் விடயத்திலும்,ஜக்காத் கொடுக்காதவர்கள் மீது போர் தொடுக்கும் விடயத்திலும் விவாதங்கள் நடைபெற்று பின் இருவரும் ஒரே முடிவை எடுத்தனர்
    அடுத்து முஜாதலா எனப்படும் விதண்டாவாதம். இதில் ஈடுபடுவோர் ஏற்கனவே ஒரு விடயத்தில் இது தான் சரி யென முடிவு செய்திருப்பர். பின் தன் கருத்திற்கு எதிராக உள்ளவருடன் தன கருத்துதான் சரியானது எதிரி கருத்து தவறு என நிறுப்பிக்கமுயற்சி செய்வர்.எதிர் கருத்துள்ளவர் என்னதான் தங்களின் கருத்துக்கு ஆதரவாக காட்டினாலும் அதை பரிசிலிக்க மாட்டர்கள் .தங்கள் கருத்தே சரி என விதண்டாவாதம் செய்வார்கள்
இது மன வருத்தத்தையும் பிளவையும் ஏற்படுத்தும்

மூன்றாவது முகாபரா இது, தான் பெரிய அறிஞர் என்னை யாராலும் வெல்ல முடியாது என்பதற்காகவே விவாதம் செய்வது இதுவும் தவறான விவாதம்

   நான் லால்பேட்டை மதரசாவில்1966ம் ஆண்டுகல்வி கற்கும்போது
என்னுடைய ஆசிரியர் கைருல்மில்லத் அல்லாமா அப்துல்லாஹ் ஹஜ்ரத் ரஹீமஹுல்லாஹ் அவர்களிடம் இமாம் களை பின்பற்றாத வர்களிடம் எப்படி விவாதிப்பது என கேட்டேன் .அதற்கு அவர்கள் ஒரு கொள்கையை பிரச்சாரம் செய்பவர்களிடம் விவாதம் செய்யாதே, அவர்கள் ஒரு போதும் உன் கருத்தை பரிசீலிக்க மாட்டார்கள் மாறாக யார் உன்னிடம் விளக்கம் கேட்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே உன் கருத்தை முன் வை என்றார்கள்
  எனவே தான் வீண் விவாதங்களில் ஈடுபடுவதில்லை,
குறிப்பு : இதனைப் படிக்கும் சகோதரர்கள் என கருத்து சரி என்றால் லைக் செய்யுங்கள்  தவறு என்றால் கருத்து சொல்லுங்கள்
அல்லாஹ் அனைத்து விடயங்கலிலும் நேர்வழி காட்டுவானாக
ஆமீன்

  பொதுவான நியதிப்படி ஆண்கள் மீது பெண்களுக்குச் சில உரிமைகள் உள்ளன; பெண்கள் மீது ஆண்களுக்கு உள்ள சில உரிமைகளைப் போல! ஆயினும் ஆண்களுக்குப் பெண்களைவிட ஒரு படி உயர்வு உண்டு. இன்னும் அல்லாஹ் (அனைவர்மீதும்) பேராற்றலுடையோனும், நுண்ணறிவுடையோனுமாய் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 2:228)

Saturday, August 19, 2017

اقوال الحكماء

قال الإمام ابن القيم يرحمه الله

” الناس في الصلاة على خمسة أقسام :

❶ مُعاقَب : يعاقبه الله على صلاته !!

❷ مُحاسَب : يحاسبه الله على صلاته !!

❸ مُكفرٌ عنه : يكفّر الله عنه بصلاته.

❹ مُثاب : يكسب ثواب على صلاته.

❺ مُقرَّب : يقرِّبه الله إليه بصلاته.

🌴🌴🌴

⓵ الُمعاقَب :
هو من لا يهتم ولا يأتي بوضوءها ولا بأركان الصلاة ولا بواجباتها ولا بشروطها فهو يُعاقَب على صلاته !!

② الُمحاسَب :
هو من أتى بأركان الصلاة وواجباتها وشروطها ولكنه من حينما دخل في الصلاة إلى أن خرج منها وهو لا يدرك شيئاً مما قاله فيها ! يسرح ذهنه في هذه الدنيا إلى أن يقول ( السلام عليكم ) بل و يتلهف لإنهائها حتى يقضي حوائجه وما أكثر هذا الصنف ! فهو يُحاسَب على صلاته !

③ مُكفّرٌ عنه :
هو من أتى بأركان الصلاة وواجباتها وشروطها ولكنه من حينما دخل في الصلاة إلى أن خرج منها وهو يصارع نفسه و شيطانه يريد ألا يذهب قلبه عن هذه الصلاة فهو في جهاد مع نفسه لتحسين صلاته هذا يُكفّر الله عز وجل عنه.

④ المُثاب :
هو من أتى بأركان الصلاة وواجباتها وشروطها ومندوباتها وخشع فيها ! هذا يُثيبه الله عز وجل على صلاته.

⑤ الُمقَرّب :
( المرتبة العليا ) هو من أتى بأركان الصلاة وواجباتها وشروطها ومندوباتها وخشع فيها ولكنه يستحضر أن الله في قبلته ! وهذا هو الفرق بينه و بين الصنف الرابع الذي خشع ولكن لم يستحضر أنه يناجي الله وأن الله في قبلته ! فمن أتى بكل شروط الصلاة و أركانها وواجباتها وخشع واستحضر أنه يناجي الله وأن الله مطلع عليه فهو مُقَرّب ! “

🍃[ الوابل الصيب ص40-50 ]

Friday, February 10, 2017

நீங்கள் எந்த வகை மனிதர்

நீங்கள் எந்த வகை மனிதர் நீங்கள்?

                                -கணியூர் இஸ்மாயில் நாஜி.
---------------------------------------------------------

நான்கு வகையான மனிதர்களை நீங்கள் பார்க்கலாம்.

1,வணக்கசாலிகள். மகிழ்ச்சிகரமான வாழ்க்கை

2, வணக்கசாலிகள்,  சிரமமான வாழ்க்கை

3, பாவம்செய்பவர்;  மகிழ்ச்சிகரமான வாழ்க்கை

4, பாவம் செய்பவர்: சிரமமான வாழ்க்கை

இவ்வகை மனிதர்களில் நீங்கள் முதல் வகையாக இருந்தால்

அது இயல்பான ஒன்று. நல்லவருக்கு எல்லாம் நன்மையாகவே முடியும்.

ஏனென்றால் அல்லாஹ் சொல்கிறான்
مَنْ عَمِلَ صَالِحًـا مِّنْ ذَكَرٍ اَوْ اُنْثٰى وَهُوَ مُؤْمِنٌ فَلَـنُحْيِيَنَّهٗ حَيٰوةً طَيِّبَةً‌  وَلَـنَجْزِيَـنَّهُمْ اَجْرَهُمْ بِاَحْسَنِ مَا كَانُوْا يَعْمَلُوْنَ‏ 
ஆணாயினும், பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற் செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம்; இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம்.
(அல்குர்ஆன் : 16:97)

நீங்கள் நான்காவது நபராக இருந்தால்

அதுவும் இயல்பான ஒன்று தான்.
பாவம் செய்பவருக்கு உடனுடக்குடன் தண்டனை.
ஏனென்றால் அல்லாஹ் சொல்கிறான்;

وَمَنْ اَعْرَضَ عَنْ ذِكْرِىْ فَاِنَّ لَـهٗ مَعِيْشَةً ضَنْكًا وَّنَحْشُرُهٗ يَوْمَ الْقِيٰمَةِ اَعْمٰى‏ 
“எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்; மேலும், நாம் அவனை கியாம நாளில் குருடனாவே எழுப்புவோம்” என்று கூறினான்.
(அல்குர்ஆன் : 20:124)

நீங்கள் இரண்டாவது வகை நபராக வணக்கசாலியாக இருந்தும் சிரமமான வாழ்க்கையாக இருந்தால் அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம்.

ஒன்று அல்லாஹ் உங்களை நேசித்து உங்களை சோதிப்பதின் மூலம் உங்களின் அந்தஸ்த்தை உயர்த்த நாடியிருக்கலாம்.

அல்லாஹ் சொல்கிறான்;
وَلَـنَبْلُوَنَّكُمْ بِشَىْءٍ مِّنَ الْخَـوْفِ وَالْجُـوْعِ وَنَقْصٍ مِّنَ الْاَمْوَالِ وَالْاَنْفُسِ وَالثَّمَرٰتِ وَبَشِّرِ الصّٰبِرِيْنَۙ‏ 
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
(அல்குர்ஆன் : 2:155)

அல்லது, உங்கள் வணக்கங்களில் குறைபாடு ஏற்பட்டு அதில் கவனம் செலுத்தாமல் இருந்தால், அல்லது ஏதேனும் பாவமான காரியங்களில் ஈடுபட்டு அதைப்பற்றிய சிந்தனையில்லாமல் இருந்தால் உங்களை தன் பால் தவ்பா செய்து ஈர்க்க அல்லாஹ் செய்யும் ஏற்பாடாக  உங்களுக்கு துன்பத்தைத் தரலாம்.

அல்லாஹ் சொல்கிறான்;

وَلَنـــُذِيْقَنَّهُمْ مِّنَ الْعَذَابِ الْاَدْنٰى دُوْنَ الْعَذَابِ الْاَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ‏ 
மேலும், அவர்கள் (பாவங்களிலிருந்து) திரும்பி விடும் பொருட்டுப் பெரிய வேதனையை (மறுமையில் அவர்கள்) அடைவதற்கு முன்னதாகவே (இம்மையில்) சமீபமான ஒரு வேதனையை அவர்கள் அனுபவிக்கும்படிச் செய்வோம்.
(அல்குர்ஆன் : 32:21)

நீங்கள்  மூன்றாவது நபராக பாவங்கள் பல செய்தும் இவ்வுலக வாழ்க்கை மேலும் மேலும் இன்பகரமான வாழ்க்கையாக இருந்தால்
என் அன்புச்சகோதரனே! எச்சரிக்கை,எச்சரிக்கை
இது மெது,மெதுவாக உங்களை அழிவின் பால் இட்டுச்செல்லும் தூண்டிலாக இருக்கலாம். நிரம்பவும் ஆபத்தான வாழ்க்கை இது

அல்லாஹ் சொல்கிறான்;

فَلَمَّا نَسُوْا مَا ذُكِّرُوْا بِهٖ فَتَحْنَا عَلَيْهِمْ اَبْوَابَ كُلِّ شَىْءٍ  حَتّٰٓى اِذَا فَرِحُوْا بِمَاۤ اُوْتُوْۤا اَخَذْنٰهُمْ بَغْتَةً فَاِذَا هُمْ مُّبْلِسُوْنَ‏ 
அவர்களுக்கு நினைவூட்டப்பட்ட நற்போதனைகளை அவர்கள் மறந்துவிட்ட போது, அவர்களுக்கு (முதலில்) எல்லாப் பொருட்களின் வாயில்களையும் நாம் திறந்து விட்டோம் - பின்னர், அவர்களுக்கு கொடுக்கப்பட்டதைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்த வேளை (நம் வேதனையைக் கொண்டு) அவர்களை திடீரெனப் பிடித்துக் கொண்டோம்; அப்போது அவர்கள் நம்பிக்கை இழந்தவர்களாக ஆகிவிட்டனர்.
(அல்குர்ஆன் : 6:44)

விழித்துக்கொள். திருத்திக்கொள்.

அல்லாஹ் நம்மை காப்பானாக! என்றென்றும் அவனுக்கு நன்றியுள்ள நல்லடியாராக வாழ வைப்பானாக! ஆமீன்.
أقوال و دروس شيخ الإسلام ابن تيمية
என்ற அரபி முக நூல் பக்கத்திலிருந்து தமிழாக்கம்  கணியூர் இஸ்மாயீல் நாஜி