Monday, January 11, 2016

ஞானி இப்ராஹிம் பின் அத்ஹம் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம்,
"நாங்கள் துஆ செய்கிறோம் அது ஏற்றுக் கொள்ளப்படுவதில்லையே ஏன்?" என்று கேட்கப்பட்டது.
ஞானி சொன்னார் :
பத்து விடயங்களால் உங்கள் உள்ளம் செத்து கிடக்கிறது.

1 - அல்லாஹ்வை அறிந்திருக்கிறீர்கள்; அவனுக்கு கட்டுப்படுவதில்லை.
2 - நபியை அறிந்திருக்கிறீர்கள்; அவர்களின் வழிமுறையை பேணுவதில்லை.
3 - குர்ஆனை அறிந்திருக்கிறீர்கள்; அதன்படி நடப்பதில்லை.
4 - அல்லாஹ்வின் அருட்கொடைகளை அனுபவிக்கிறீர்கள்; அதற்கு நன்றி செலுத்துவதில்லை.
5 - சொர்க்கத்தை அறிந்திருக்கிறீர்கள்; அதை அடைவதற்கான வழியை தேடுவதில்லை.
6 - நரகத்தை அறிந்திருக்கிறீர்கள்; அதிலிருந்து தப்பிக்க முயல்வதில்லை
7 - ஷைத்தானை அறிந்திருக்கிறீர்கள்; அவனை எதிர்த்து போராடுவதில்லை.
8 - மவ்த்தை அறிந்திருக்கிறீர்கள்; அதை எதிர்கொள்ள தயாராக இல்லை.
9 - இறந்தவர்களை அடக்கம் செய்கிறீர்கள்; அவர்களிடமிருந்து எந்த படிப்பினையும் பெற்றுக் கொள்வதில்லை.
10 -தூக்கத்திலிருந்து விழித்தெழுகிறீர்கள்; மக்களின் குறைகளை ஆராய்கிறீர்கள்; உங்களின் குறைகளை கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறீர்கள்...
எனவே தான் உங்கள் துஆக்களை அல்லாஹ் ஏற்றுக்கொள்வதில்லை
------------இணைய தளத்திலிருந்து கணியூர் நாஜி